மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டத்தின் மொரார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட அசித்ரோமைசின் ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் மருந்து ஆய்வாளர்களிடம் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து மருந்து மாதிரிகளை போபால் மற்றும் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து பரிசோதனைக்கூடத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
